Jump to content


Photo

ஏன் தலைக்குப் பின்னால் கை கட்டக்கூடாது?

News

  • This topic is locked This topic is locked
4 replies to this topic

#1 🅃.🅼.🅸.🅽.🅴.🅁

🅃.🅼.🅸.🅽.🅴.🅁
  • Team Rockers
  • 2,364 posts

Posted 16 April 2018 - 07:29 PM

தலைக்குப் பின்னால் கை கட்டினால் பெற்றோருக்கு தீங்கு நேருமா?
 
👉 நாம் இருகைகளையும் கோர்த்துக்கொண்டு தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்தாலோ அல்லது நடந்து போனாலோ பெரியோர்கள் தலைக்குப் பின்னால் கைகளைக் கட்டாதே தகப்பனுக்கு ஆகாது என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். மருத்துவரீதியாக இதற்கான காரணமும் இருக்கின்றது.
 
👉 வெகுநேரம் நாம் கைகளை தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு இருக்கும் போது தலையில் உள்ள வர்ம ஸ்தானங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படும். இதனால் தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, இரத்த ஓட்டமும் பாதிப்படையும். 
 
👉 மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு மூளை தன் செயல்திறனை இழக்கக்கூடிய அபாயம் ஏற்படலாம். பொதுவாகவே எந்த ஒரு மர்ம ஸ்தானங்களிலும் அதிகமான அழுத்தங்கள் கொடுப்பது தீமையைச் செய்யும். இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் தலைக்குப் பின் கைகட்டினால் பெற்றோருக்கு தீங்கு ஏற்படும் என்று கை கட்டுவதைத் தடுத்து வைத்தார்கள்.
 
 
தூங்கும்போது நெஞ்சுமேல் கைகட்டி இருக்கலாமா? 
 
👉 பலர் தூங்கும் போது ஒருமுகமாகத் திரும்பிப் படுத்திருப்பர். இன்னும் சிலரோ மல்லாக்காகப் படுத்துக் கொண்டு தூங்குவர். இன்னும் சிலரோ மல்லாக்காகப் படுத்துக் கொண்டு இருகைகளையும் இருக்கக்கட்டிக் கொண்டு தன் மார்பின் மேல் வைத்துக் கொண்டு தூங்குவர். 
 
👉 இப்படி நாம் கைகளைக் கட்டிக் கொண்டு தூங்கக் கூடாது என்பது ஆசார விதி. ஆனால் பலர் இதை அனுசரிக்காமல் மார்பின் மேல் கைகளை கட்டிக் கொண்டு குறட்டை விட்டு அட்டகாசமாக தூங்குவர். இதனால் ஏதோ ஒரு தோஷம் வந்து சேரும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் உண்டு. 
 
👉 இப்படித் தூங்குவது விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் உடல் நலத்திற்கு நல்லதல்ல. இப்படி கைகளைக் கட்டிக் கொண்டு தூங்குவதால் நம் இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு இதனால் சுவாசிப்பதற்குத் தடை ஏற்படலாம்.
 
👉 இது இதய அசைவுகளையும், அழுத்தங்களையும் பாதிப்படையச் செய்யும். இப்படித் தூங்கும் பழக்கம் உள்ள பலருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவம் கூறுகிறது. ஆகவே மார்பின் மேல் கைகளைக் கட்டிக் கொண்டு தூங்கக்கூடாது. 

  • ~TR Tamilan~, SHARPU and raju ac like this

🄼🄸🄽🄴


#2 ~TR Tamilan~

~TR Tamilan~

    Fan of TR

  • Senior Member
  • 684 posts

Posted 16 April 2018 - 08:44 PM

Really good info bro..
  • 🅃.🅼.🅸.🅽.🅴.🅁 likes this

#3 SHARPU

SHARPU
  • VIP
  • 4,251 posts

Posted 16 April 2018 - 10:56 PM

நல்ல தகவல்.....
நன்றி.....

#4 NITHISH NITHI

NITHISH NITHI

    TR VERIYAN

  • VIP
  • 1,418 posts

Posted 16 April 2018 - 11:34 PM

Semma information nanbaa..